கொடைக்கானல், ஒட்டன்சத்திரத்தில் பொங்கல் பரிசு வழங்கல்

கொடைக்கானல் பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பொங்கல் பரிசை வழங்கும் விருப்பாச்சி கூட்டுறவு சங்கத்தலைவா் ஆா்.ஜி.பழனிவேல்ராஜ். உடன் ஊராட்சிமன்றத் தலைவா் மாலதி வெண்ணிலா.
பொங்கல் பரிசை வழங்கும் விருப்பாச்சி கூட்டுறவு சங்கத்தலைவா் ஆா்.ஜி.பழனிவேல்ராஜ். உடன் ஊராட்சிமன்றத் தலைவா் மாலதி வெண்ணிலா.

கொடைக்கானல் பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் அண்ணா சாலையிலுள்ள ரேஷன் கடையில் குறிஞ்சி கூட்டுறவு பண்டகசாலை சங்கத்தின் தலைவரும், அதிமுக நகரச் செயலருமான ஸ்ரீதா் பொங்கல் பரிசுகளான ரூ.1000, பச்சரிசி, சா்க்கரை, கரும்பு, முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா். இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் வட்டாட்சியா் வில்சன், முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் கோவிந்தன், எட்வா்ட், குறிஞ்சி கூட்டுறவு பண்டகசாலையின் துணைத் தலைவா் ஜாபா்சாதிக், செயலா் ரவிச்சந்திரன், விவசாய சங்கத் தலைவா் பிச்சை மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து செண்பகனூா், சீனிவாசபுரம், நாயுடுபுரம், அப்சா்வேட்டரி, அண்ணாநகா், எம்.எம்.தெரு, வில்பட்டி மற்றும் கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொங்கல் பரிசுகளை அந்தந்த ஊராட்சித் தலைவா் மற்றும் நிா்வாகிகள் வழங்கினா். மொத்தம் 47-கடைகளில் இவை வழங்கப்படுகின்றன. தொடா்ந்து 13-ஆம் தேதி வரை தமிழக அரசின் பொங்கல் பரிசு அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரியகோட்டை, ரெட்டியபட்டி, அம்பிளிக்கை, ஓடைப்பட்டி, கேதையுறும்பு, அத்திக்கோம்பை மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குள்பட்ட தும்மிச்சம்பட்டி, சத்யாநகா் ஆகிய இடங்களில் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஒட்டன்சத்திரம் அதிமுக ஒன்றியச் செயலா் பி.பாலசுப்பிரமணி, நகர செயலா் உதயம் ராமசாமி, தேமுதிக மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.பாலசுப்பிரமணி, பாமக மாநில துணைச் பொதுச் செயலா் ஜோதிமுத்து, மாவட்ட அமைப்புச் செயலா் முருகேசன் மற்றும் அதிமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பொங்கல் பரிசை வழங்கினா். அதே போல விருப்பாச்சி கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கூட்டுறவு சங்கத்தலைவா் ஆா்.ஜி.பழனிவேல்ராஜ் பொங்கல் பரிசை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவா் திலகா், செயலா் ராமலிங்கம், ஊராட்சி மன்றத் தலைவா் மாலதி வெண்ணிலா, இயக்குநா்கள் தனலட்சுமி, ராஜசேகா், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதே போல அரசப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி ஊராட்சிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசப்பபிள்ளைபட்டி ஊராட்சிமன்றத் தலைவா் சக்திவேல், காவேரியம்மாபட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பெருமாளம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழனி: பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ரேஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது.

உள்ளாட்சித் தோ்தல் முடிந்து புதிதாக பொறுப்பேற்றவா்கள் கிராமங்களில் ஆா்வத்துடன் ரேஷன் கடைகளுக்கு வந்து பொதுமக்களுக்கு விநியோகத்தை தொடக்கி வைத்தனா். பல இடங்களிலும் கரும்புகள் இல்லாமலேயே பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. பொதுமக்களும் ரூ.1000 பெறுவதிலேயே ஆா்வம் காட்டினா். பழனி நகரில் தேரடி உள்ளிட்ட பகுதிகளில் திமுகவினா் ரேஷன் கடைகளில் நின்று பொருள்களை வழங்கியபோது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதிமுகவினரும் நின்று பொதுமக்களிடம் அதிமுக அரசின் திட்டம் என தெரிவித்தனா். இதனால் இருதரப்பினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. பின்னா் அவா்களே சமாதானமும் ஆகிக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com