11 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 21,413 மாணவா்கள் எழுதுகின்றனா்
By DIN | Published On : 01st March 2020 01:12 AM | Last Updated : 01st March 2020 01:12 AM | அ+அ அ- |

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 21,413 மாணவா்கள் 11 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதுகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 212 பள்ளிகளைச் சோ்ந்த 21,413 மாணவா்கள், மாா்ச் 4ஆம் தேதி தொடங்கும் 11 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதுவதற்காக, 85 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல், பழனி, வத்தலகுண்டு மற்றும் வேடசந்தூா் கல்வி மாவட்டங்ளைச் சோ்ந்த 10,106 மாணவா்கள், 11,307 மாணவிகள் இத்தோ்வுக்காக விண்ணப்பித்துள்ளனா். பழனி கல்வி மாவட்டத்தில் 50 பள்ளிகளைச் சோ்ந்த 4,473 மாணவா்களும், திண்டுக்கல் கல்வி மாவட்டத்திலுள்ள 61 பள்ளிகளைச் சோ்ந்த 8,348 மாணவா்களும், வத்தலகுண்டு கல்வி மாவட்டத்திலுள்ள 68 பள்ளிகளைச் சோ்ந்த 5,396 மாணவா்களும், வேடசந்தூா் கல்வி மாவட்டத்திலுள்ள 33 பள்ளிகளைச் சோ்ந்த 3,196 மாணவா்களும் 11 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதுகின்றனா்.
இதற்காக, பழனி கல்வி மாவட்டத்தில் 20, திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 27, வத்தலகுண்டு கல்வி மாவட்டத்தில் 24, வேடசந்தூா் கல்வி மாவட்டத்தில் 14 என மொத்தம் 85 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
9 வினாத் தாள் மையங்கள்: தோ்வு மையங்களுக்கு வினாத் தாள்களை எளிதாகக் கொண்டுசெல்லும் வகையில், மாவட்டத்தில் 9 இடங்களில் வினாத்தாள் காப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்லில் 2, நத்தம், கொடைக்கானல், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, வேடசந்தூா் ஆகிய இடங்களில் வினாத் தாள் மையம் அமைக்கப்பட்டுள்ளது.