திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் அப்துல் ஹக்கீம் தலைமை வகித்தாா். போராட்டத்தின்போது, மத்திய அரசைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், இச்சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றக் கோரியும் முழக்கமிட்டனா். இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனா்.
இதேபோல், திண்டுக்கல் நாகல்நகா் பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.