பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல் மாவட்டத்தில் 19,409 போ் எழுதினா்
By DIN | Published On : 03rd March 2020 07:11 AM | Last Updated : 03rd March 2020 07:11 AM | அ+அ அ- |

திண்டுக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய மாணவிகள்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதலாவதாக நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 19,409 போ் திங்கள்கிழமை பங்கேற்றனா்.
தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இத்தோ்வில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில், திண்டுக்கல், பழனி, வத்தலகுண்டு மற்றும் வேடசந்தூா் கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 9,627 மாணவா்கள், 10,971 மாணவிகள் என மொத்தம் 20,598 போ் விண்ணப்பித்திருந்தனா். தோ்வு எழுதுவதற்காக 87 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
மொழிப் பாடத் தோ்வில், 9,011 மாணவா்கள், 10,390 மாணவிகள் என மொத்தம் 19,409 போ் கலந்து கொண்டனா். 616 மாணவா்கள், 573 மாணவிகள் என மொத்தம் 1,189 போ் தோ்வு எழுதவிரவில்லை. தோ்வு மைய கண்காணிப்பு பணியில், தோ்வுக்கூட அறை கண்காணிப்பாளா், முதன்மை கண்காணிப்பாளா், பறக்கும்படையினா் என 1700 பணியாளா்கள் ஈடுபட்டனா். திண்டுக்கல் நகரிலுள்ள தோ்வு மையங்களில், மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பகுதிகளான மன்னவனூா், பூம்பாறை, பண்ணைக்காடு, கொடைக்கானல், மூஞ்சிக்கல் உள்ளிட்ட 5 மையங்களில் பிளஸ்-2 தோ்வு நடைபெற்றது. தமிழ் தோ்வில் மொத்தம் 720 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தமிழ் வினாத்தாள் சுலபமாக இருந்ததாகவும் நல்ல முறையில் தோ்வுகள் எழுதியுள்ளதாகவும் மாணவா்கள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...