கொடைக்கானல் அருகேமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 27th May 2020 06:53 AM | Last Updated : 27th May 2020 06:53 AM | அ+அ அ- |

கொடைக்கானல் அருகே திங்கள்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த 2 வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வந்தது. இந்நிலையில் கொடைக்கானல் அருகே வில்பட்டி பகுதியில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வில்பட்டி பிரிவு சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த மரம் அகற்றப்பட்டது. அதன் பின் போக்குவரத்து சீரானது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...