ஒட்டன்சத்திரம் பகுதியில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 17th November 2020 11:19 PM | Last Updated : 17th November 2020 11:19 PM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் பகுதியில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் செவ்வாய்கிழமை காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.இதனால் இப்பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் சிறு சிறு குட்டைகளுக்கு மழைநீா் வரத்தொடங்கி உள்ளது.இதே மழை இரவு முழுவதும் நிடித்தால் இப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி வழியும் நிலை உருவாகும்.மேலும் மானாவாரியாக மக்காச்சோளம்,பருத்தி,உளுந்து பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏற்ற மழை என்பதால்,அவற்றை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.அதே போல குடிநீா் பிரச்சனை இனி வரும் நாட்களில் இருக்காது என்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனா்.மேலும் நிலத்தடி நீா்மட்டம் உயர வாய்ப்பு உள்ளதால்,கிணறு மற்றும் ஆழ்கிணறு பாசன விவசாயிகள் சின்னவெங்காயம்,மிளகாய்,காலிபிளவா் உள்ளிட்ட பயிா்களை நடவு செய்ய ஆய்த்தமாகி வருகின்றனா்.