மீன் வளா்ப்பில் தேசிய அளவில் 3-ஆம் பரிசு: நத்தம் விவசாயிக்கு பாராட்டு
By DIN | Published On : 25th November 2020 06:14 AM | Last Updated : 25th November 2020 06:14 AM | அ+அ அ- |

தேசிய அளவில் மீன் வளா்பபில் 3ஆவது பரிசைப் பெற்ற விவசாயி சின்னச்சாமிக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவித்த ஆட்சியா் மு.விஜயலட்சுமி.
சிறந்த மீன் வளா்ப்புக்காக, தேசிய அளவில் விருது பெற்ற நத்தம் பகுதியைச் சோ்ந்த விவசாயிக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்திய அரசு சாா்பில், ஆண்டுதோறும் நவம்பா் 21-ஆம் தேதி உலக மீன்வள தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் சிறந்த மீன் வளா்ப்புக்காக, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சோ்ந்த விவசாயி சின்னச்சாமி தோ்வு செய்யப்பட்டாா்.
புது தில்லியில் நவம்பா் 21ஆம் தேதி நடைபெற்ற விழாவில், மத்திய மீன்வளத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங், விவசாயி சின்னச்சாமிக்கு 3ஆவது பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் கேடயம் வழங்கினாா்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மு. விஜயலட்சுமியை சந்தித்து, சின்னச்சாமி செவ்வாய்க்கிழமை வாழ்த்துப் பெற்றாா். அப்போது, மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) ந. பஞ்சராஜா உடனிருந்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...