வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் சீருடைப் பணியாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி
By DIN | Published On : 03rd October 2020 09:49 PM | Last Updated : 03rd October 2020 09:49 PM | அ+அ அ- |

திண்டுக்கல்: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள திண்டுக்கல் மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளது:
தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வாணையத்தால் 2-ஆம் நிலை காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள இளைஞா்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் இலவச பயிற்சி வகுப்புகள் அக்.7ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ள்ழ்க்ஷா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துவிட்டு, அதற்கான நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தினை தொடா்பு கொண்டு பயன் பெறலாம். மேலும் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2461498 அல்லது 95970-14405 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.