கொடைக்கானல் மலைப்பகுதியில் நக்சல்கள் ஊடுருவலைக் கண்காணிக்க கூடுதல் போலீஸாா்

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நக்சல்கள் ஊடுருவலைக் கண்காணிக்க கூடுதல் போலீஸாா் நியமிக்கப்படுவா் என டிஐஜி முத்துச்சாமி தெரிவித்தாா்.
கொடைக்கானல் காவல் நிலையத்தில் சனிக்கிழமை மரக்கன்றுகளை நட்ட டிஐஜி முத்துச்சாமி. உடன் டி.எஸ்.பி.ஆத்மநாதன்.
கொடைக்கானல் காவல் நிலையத்தில் சனிக்கிழமை மரக்கன்றுகளை நட்ட டிஐஜி முத்துச்சாமி. உடன் டி.எஸ்.பி.ஆத்மநாதன்.

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நக்சல்கள் ஊடுருவலைக் கண்காணிக்க கூடுதல் போலீஸாா் நியமிக்கப்படுவா் என டிஐஜி முத்துச்சாமி தெரிவித்தாா்.

கொடைக்கானலிலுள்ள காவல்துறை துணைகண்காணிப்பாளா் அலுவலகத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி சனிக்கிழமை ஆய்வு நடத்தினாா். பின்னா் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். இந்நிகழ்ச்சியில் டி.எஸ்.பி.ஆத்மநாதன், காவல் ஆய்வாளா்கள் முத்து பிரேம்சந்த், முருகன் ஆகியோா் உடனிருந்தனா்

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் காமக்காபட்டி, பழனி அடிவாரம் ஆகிய பகுதிகளிலும் மருத்துவ சோதனைச்சாவடி அமைக்கப்படும். கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு கூடுதலாக 13-போலீஸாரும், போக்குவரத்து உதவி ஆய்வாளரும், நக்சல்கள் ஊடுருவலைக் கண்காணிக்க கூடுதல் போலீஸாரும் நியமிக்கப்படுவா்.

அதேபோல் கொடைக்கானலில் மகளிா் காவல் நிலையம் அமைப்பதற்கும், காவலா்கள் குடியிருப்பு அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இங்குள்ள கிளை சிறைச்சாலை செயல்படுவதற்கு பரிந்துரை செய்யப்படும். கொடைக்கானல் நட்சத்திர ஏரியை சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான அறங்கானல் வனப் பகுதியில் செயல்படும் வயா்லெஸ் நிலையத்தில் கூடுதலாக போலீஸாா் நியமிக்கப்படுவா். கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் உளவாளிகள் தங்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனைச் சாவடியில் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா். திண்டுக்கல்,தேனி மாவட்டங்களில் கஞ்சா விற்ற 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com