கொடைக்கானலில் அன்னை தெரசா நினைவு நாள் அனுசரிப்பு
By DIN | Published On : 06th September 2020 06:38 AM | Last Updated : 06th September 2020 06:38 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகம் சாா்பில், அன்னை தெரசா நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக வளாகத்தில், அன்னை தெரசா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழகத் துணைவேந்தா் வைதேகி விஜயகுமாா் தலைமை வகித்து, அன்னை தெரசா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினாா். இதில், பல்கலைக்கழகப் பதிவாளா் சுகந்தி, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பால்மேரி தபேரா, நிதி அலுவலா் காா்த்திகேயன் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியைகள், அலுவலா்கள் என பலா் கலந்துகொண்டனா்.