கொடைக்கானலில் கனமழை: அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
By DIN | Published On : 06th September 2020 07:17 PM | Last Updated : 06th September 2020 07:17 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் பெய்த மழையின் காரணமாக வில்பட்டி பள்ளங்கி வனப் பகுயிலுள்ள முத்தப்பஓடையில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே சாரல் மழையும் அதனைத் தொடர்ந்து கன மழையும் பெய்தது.
இந்த மழையால் கிராமப் பகுதிகளிலுள்ள காமராஜர் ஓடை, பள்ளங்கி அருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கொடைக்கானலில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.