கொடைக்கானலில் பலாப்பழம் விற்பனை அதிகரிப்பு
By DIN | Published On : 11th September 2020 05:22 PM | Last Updated : 11th September 2020 05:22 PM | அ+அ அ- |

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளையும் பலாப் பழத்தைக் விற்பனை செய்யும் வியாபாரி.
கொடைக்கானலில் பலாப்பழம் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் வாழைப்பழம், ஆரஞ்சு, அவக்கோடா, ஸ்டார் புருட்ஸ், பேஷன் புருட் உள்ளிட்ட பல்வேறு பழங்கள் விளைந்து வருகின்றன. இதில் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான வாழைகிரி, மச்சூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கடுகுதடி, வடகரைப்பாறை, பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலாப் பழம் அதிக அளவில் வளர்ந்து வருகிறது.
இந்தப் பழமானது ஆகஸ்ட், செப்டம்பர், அக்டாபர், நவம்பர் வரை விளைச்சல் தரும். நிகழாண்டில் மழை நன்கு பெய்ததால் விளைச்சல் அதிகமாக இருந்தது. ஒரு பழமானது எடைக்கு ஏற்றார் போல் ரூ.75 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் கரானா தொற்றால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் இருந்தது. இதனால் பலாப்பழம் விற்பனை வெகுவாக குறைந்திருந்தது.
தற்போது இபாஸ் பெற்று கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரலாம் என தமிழக அரசு தெரிவித்துவிட்டது இதனைத் தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இவர்கள் கொடைக்கானலில் விளையும் பலாப் பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதனால் பழ வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G