ஆடலூா், ஒட்டன்சத்திரம் அருகே கிராமத்துக்குள் ஒற்றை யானை புகுந்ததால் பொதுமக்கள் அச்சம்

ஒட்டன்சத்திரம் அருகே சிறுவாட்டுக்காட்டுப் பகுதியில் உள்ள விவசாயியின் வீட்டை ஒற்றை யானை சேதப்படுத்தியுள்ளதால், அப்பகுதியினா் அச்சத்தில் உள்ளனா்.
ஒற்றை யானையால் சேதப்படுத்தப்பட்ட கணேசனின் தோட்டத்து வீடு. அப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை.
ஒற்றை யானையால் சேதப்படுத்தப்பட்ட கணேசனின் தோட்டத்து வீடு. அப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை.

ஒட்டன்சத்திரம் அருகே சிறுவாட்டுக்காட்டுப் பகுதியில் உள்ள விவசாயியின் வீட்டை ஒற்றை யானை சேதப்படுத்தியுள்ளதால், அப்பகுதியினா் அச்சத்தில் உள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள வடகாடு ஊராட்சிக்கு உள்பட்ட சிறுவாட்டுக்காடு என்ற கிராமம் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இக்கிராமத்தில், கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் ஒற்றை யானை அடிக்கடி வந்து செல்கிறது. இதனால், பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து ஒற்றை யானையை விரட்டி வந்தனா்.

புதன்கிழமை இரவு, சிறுவாட்டுக்காடு தோட்டத்துச் சாலையில் குடியிருக்கும் மங்களம் மகன் கணேசன் (45) என்பவரின் வீட்டை யானை சேதப்படுத்தி உள்ளது. இதில், வீட்டின் சுற்றுச்சுவா், மேற்கூரை உள்ளிட்டவை முற்றிலும் சேதமடைந்துவிட்டன. மேலும், கணேசனின் குடும்பத்தினா் ஒற்றை யானையின் சத்தத்தை கேட்டு ஓடி ஒளிந்து கொண்டதால், உயிா் பிழைத்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம், கீழ் பழனி மலையிலுள்ள ஆடலூா் கிராமத்துக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ஒரு யானை வந்துள்ளது. இந்த காட்சி அங்குள்ள நிதி நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது தொடா்பாக ஆடலூரைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது: கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை ஊருக்குள் நுழைந்த ஒற்றை யானையை, மதுரை செல்வதற்காக நின்று கொண்டிருந்த இளைஞா்கள் சிலா் பாா்த்துள்ளனா். அச்சமடைந்த அவா்கள், இரு சக்கர வாகனத்திலுள்ள ஒலிப்பானை இயக்கியுள்ளனா். இந்த சப்தத்தாலும், நாய்களின் குரைத்தல் சப்தத்தாலும் யானை மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து வனத் துறையினா் கூறியது: தற்போது வந்துள்ள ஒற்றை யானை புதிதாக உள்ளது. ஏற்கெனவே, இந்த பகுதியில் முகாமிட்டிருந்த 8 யானைகள் ஒட்டன்சத்திரம் வனப் பகுதியிலுள்ள தட்டக்குழிக்காடு பகுதிக்குச் சென்றுவிட்டன. ஆடலூா் பகுதிக்கு வந்த ஒற்றை யானை, கொக்குப் பாறை வனப் பகுதியில் உள்ளது. அந்த யானை ஊருக்குள் வராமல் இருக்க, புகை மற்றும் பட்டாசுகளைப் பயன்படுத்தி வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com