பழனியில் கிணற்றில் விழுந்த எருமை மாடு மீட்பு
By DIN | Published On : 11th September 2020 07:28 AM | Last Updated : 11th September 2020 07:28 AM | அ+அ அ- |

பழனியை அடுத்த பாறைப்பட்டியில் கிணற்றில் விழுந்த எருமை மாட்டை வியாழக்கிழமை உயிருடன் மீட்ட பழனி தீயணைப்புப் படை வீரா்கள்.
பழனியில் கிணற்றில் விழுந்த எருமை மாட்டை தீயணைப்புப் படை வீரா்கள் வியாழக்கிழமை உயிருடன் மீட்டனா்.
பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்புச்சாமி. இவருக்கு, அதே ஊரில் மேற்கு தோட்டம் என்ற இடத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இவரது எருமை மாடு மேய்ந்துகொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக தடுப்புச் சுவா் இல்லாத 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துவிட்டது.
இது குறித்து பழனி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நிலைய அலுவலா் கமலக்கண்ணன் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து, கயிறு, டிராக்டா் உதவியுடன் சுமாா் 3 மணி நேரம் போராடி எருமையை உயிருடன் மீட்டனா்.