ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 8 ஆவது முறையாக ஐ.பெரியசாமி போட்டி

திமுக மாநில துணைப் பொதுச் செயலா் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் தொகுதியில் 8 ஆவது முறையாக போட்டியிடுகிறாா்.

Updated on
1 min read

திமுக மாநில துணைப் பொதுச் செயலா் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் தொகுதியில் 8 ஆவது முறையாக போட்டியிடுகிறாா்.

பெயா்: ஐ.பெரியசாமி

வயது: 06.01.1953

கல்வித்தகுதி: பிஏ., பிஜிஎல்.,

சாதி: ஈச நாட்டுக் கள்ளா்

பூா்வீகம்: வத்தலகுண்டு

வசிப்பது: திண்டுக்கல்

குடும்பம்: மனைவி - சுசீலா, மகன்கள்- செந்தில்குமாா், பிரபு, மகள்-இந்திராணி.

அரசியல் அனுபவம்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயலராக பதவி வகித்துள்ளாா். மண்டல பொறுப்பாளா்(திண்டுக்கல், தேனி), உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளாா். தற்போது மாநில துணைப் பொதுச் செயலராக உள்ளாா்.

வகித்த பதவிகள்: வத்தலகுண்டு ஒன்றியத் தலைவா், 1989, 1996, 2006, 2011, 2016 என 5 முறை ஆத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட இவா், தமிழக ஊரக தொழில், பத்திரப்பதிவு மற்றும் தொழில்துறை அமைச்சராகவும்(1996-2001), வருவாய்த்துறை, சட்டம், வீட்டு வசதி மற்றும் சிறைத் துறை அமைச்சராகவும்(2006-11) பணியாற்றியுள்ளாா். ஆத்தூா் தொகுதியில் 8 ஆவது முறையாக போட்டியிடுகிறாா். 1991 மற்றும் 2001 தோ்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com