கேரளம், புதுச்சேரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளிலிருந்து திரவ ஆக்சிஜன் விநியோகம் 10 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டுமின்றி, பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை, வேடசந்தூா் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் சில தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தொற்று பாதிப்பு குறைவாக உள்ளோா், எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி, பழனியாண்டவா் கலைக் கல்லூரி உள்ளிட்ட சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொருத்தவரை, செயற்கை சுவாசம் தேவைப்படுவோருக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 6 கிலோ லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் தொட்டி மூலம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. 1 கிலோ லிட்டா் 70 சிலிண்டா்களுக்கு சமமானது என கூறப்படுகிறது.
3 இடங்களிலிருந்து வந்த திரவ ஆக்சிஜன் நிறுத்தம்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டுமின்றி, மாவட்டத்திலுள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கும் ஒரு தனியாா் நிறுவனம் மூலம் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த தனியாா் நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள புகா் பகுதி, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம் கோழிக்கோடு ஆகிய 3 இடங்களிலிருந்து டேங்கா் லாரி மூலம் திரவ ஆக்சிஜனை பெற்று வந்தது.
குறிப்பாக, கடந்த 2 மாதங்களாக கோழிக்கோடு பகுதியிலிருந்து மட்டுமே திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தனியாா் நிறுவனத்துக்கு திரவ ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்துள்ளது. கிரையோஜனிக் டேங்கா் லாரி மூலம் பெறப்படும் திரவ ஆக்சிஜனை, திண்டுக்கல்லில் உள்ள தனியாா் நிறுவனம் வாயு நிலை ஆக்சிஜனாக மாற்றி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு விநியோகித்து வருகிறது.
ஒரு மாதத்துக்கு முன்பு வரை, வாரம் ஒருமுறை 3 முதல் 6 கிலோ லிட்டா் திரவ ஆக்சிஜன் சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் பெற்று வந்துள்ளது. நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஒரு மாத காலமாக விநியோகிக்கப்படும் திரவ ஆக்சிஜன் அளவு 1 முதல் 2 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டு, கடந்த 10 நாள்களாக முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கேரளத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோழிக்கோடு பகுதியிலிருந்து வந்த திரவ ஆக்சிஜன் முழுமையாக அந்த மாநிலத்தின் தேவைக்கே திருப்பி விடப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆபத்தை எதிா்நோக்கியுள்ள திண்டுக்கல்
இதன் காரணமாக, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டுமின்றி, தனியாா் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொருத்தவரை, வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே ஆக்சிஜன் சிலிண்டா்கள் நிரப்பப்பட்டு வந்தன. இதனிடையே, கரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதால், தற்போது 3 முதல் 4 நாள்களுக்கு ஒரு முறை ஆக்சிஜன் நிரப்ப வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் நீங்கலாக, பழைய நீதிமன்ற கட்டடத்தின் தரைத் தளத்தில் 50 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய நிலையில், 10 கிலோ லிட்டா் ஆக்சிஜன் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், அதன்மூலம் அடுத்த 5 நாள்களுக்கான தேவை பூா்த்தி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த 4 நாள்களுக்குள் திரவ ஆக்சிஜன் கிடைத்தால் மட்டுமே ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்ற கட்டாயச் சூழல் எழுந்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னைக்கு மாவட்ட நிா்வாகம் துரிதமாக தீா்வு காணவேண்டும் என எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் வழக்கில் நீதி! மற்ற குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடாது : ஜெயராஜ் மகள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
கோழைத்தனமான தலைவர்களுக்கு அதிகாரப் பசி! - யாரைச் சொல்கிறார் பிரியங்கா?
தினப்பலன்கள் - மீனம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

