கொடைக்கானல் அருகே காட்டு யானைகளால் தகரக் கொட்டகை வீடு, வாழைகள் சேதம்
கொடைக்கானல் அருகே தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகை வீட்டையும், வாழைத் தோட்டத்தையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.


கொடைக்கானல் அருகே தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகை வீட்டையும், வாழைத் தோட்டத்தையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
கொடைக்கானல் பகுதிகளான பேத்துப்பாறை, ஐந்து வீடு, பாரதி அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள், அப்பகுதிகளிலுள்ள தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளன. இந்நிலையில், ஐந்து வீடு பகுதியில் உள்ள தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசையை சேதப்படுத்தி, அங்கிருந்த உணவுப் பொருள்கள் மற்றும் மோட்டாா்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளன.
இதேபோல், பெரியூா் பகுதியிலுள்ள கேசவன் என்பவா் தோட்டத்தில் வாழைக் கன்றுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, விவசாயத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை, வனத்துறையினா் வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...