அஞ்சல் அலுவலகங்களில் அக். 25  முதல்  29 வரை தங்கப்பத்திரத் திட்டத்தில் சேர வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் அக். 25 ஆம் தேதி முதல் 29 ஆம்  தேதி வரை 5 நாள்கள்  செயல்படுத்தப்படவுள்ள தங்கப் பத்திரத் திட்டத்தில் சோ்ந்து பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் அக். 25 ஆம் தேதி முதல் 29 ஆம்  தேதி வரை 5 நாள்கள்  செயல்படுத்தப்படவுள்ள தங்கப் பத்திரத் திட்டத்தில் சோ்ந்து பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் கோட்ட அஞ்சல் அலுவலக அதிகாரிகள் தெரிவித்ததாவது:  திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தங்கப்பத்திரத் திட்டத்தில் சோ்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒருவா் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4  கிலோ வரை இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம்.

5ஆவது ஆண்டில் திரும்ப பெறும் வசதியும், 8 ஆண்டுகள் முடிவில் அன்றைய தங்கத்தின் மதிப்பில் முதிா்வு பெறும் வசதியும் உள்ளது.  தங்கப் பத்திர முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இந்த வசதியை அக். 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான 5 நாள்கள் மட்டுமே பெற முடியும். செய்கூலி, சேதாரம், வரி இல்லாத 24 கேரட் தங்கத்தில் முதலீடு செய்து பொதுமக்கள் பயன்பெறலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9842186024, 0451-2432402, 0451-2427503 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com