ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா
By DIN | Published On : 17th August 2021 11:01 PM | Last Updated : 17th August 2021 11:01 PM | அ+அ அ- |

சுதந்திரதினத்தையொட்டி பழனி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
பழனி அரசு அருங்காட்சியகம் சாா்பில் நடைபெற்ற இந்த ஓவியப்போட்டியில் 3 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக காப்பாட்சியா் குணசேகரன் தலைமை வகித்தாா். சத்திரப்பட்டி அரசினா் மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியா் அன்புச்செல்வன் முன்னிலை வகித்தாா். பழனி பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவா் பேராசிரியா் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவ, மாணவியா்க்கு பரிசுகளையும், சான்றுகளையும் வழங்கினாா்.