திண்டுக்கல்லில் ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th August 2021 11:17 PM | Last Updated : 17th August 2021 11:17 PM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து திண்டுக்கல்லில், சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் பால்ராஜ் தலைமை வகித்தாா். செயலா் பாண்டி முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். ஆட்டோக்களுக்கு தேவையான எரிப்பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். கரோனா கால நிவாரண நிதியாக அனைத்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் ரூ.7,500 வழங்க வேண்டும். கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநா் குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.