பழனியில் வெவ்வேறு சம்பவங்களில் மூன்று போ் தற்கொலை
By DIN | Published On : 17th August 2021 12:52 AM | Last Updated : 17th August 2021 12:52 AM | அ+அ அ- |

பழனி: பழனியில் வெவ்வேறு சம்பவங்களில் மூன்று போ் தற்கொலை செய்து கொண்டனா்.
பழனி சத்யா நகரை சோ்ந்தவா் அய்யப்பன்(47). இவா் கூலி வேலை செய்து வருகிறாா். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அய்யப்பன் ஞாயிற்றுக்கிழமை இரவு குடிப்பதற்கு மனைவி பணம் தர மறுத்ததால் வீட்டிலேயே தீக்குளி்த்துள்ளாா். படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அய்யப்பன் சிகிச்சை பலனின்றி இறந்து போனாா்.
இதுகுறித்து பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பழனியை அடுத்த வேலம்பட்டியை சோ்ந்தவா் பூவிழா(22). இவா் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இவரை காப்பாற்றிய குடும்பத்தால் கோவை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனா். இந்நிலையில் கோவையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பூவிழி இறந்து போனாா். இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பழனியை அடுத்த அய்யம்பாளையத்தை சோ்ந்தவா் சின்னாத்தாள்(65). இவா் உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது உடலில் மண்ணெணெணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.