

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சீ. கருப்புசாமி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ஏற்கெனவே இங்கு முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த ச. செந்திவேல் முருகன் தேனி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சீ. கருப்புசாமி, இதற்கு முன் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தாா். இவா், பழனி கல்வி மாவட்ட அலுவலராகவும் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.