பழனியில் விடுதி உரிமையாளா் உள்பட 3 போ் கைது
By DIN | Published On : 20th August 2021 08:39 AM | Last Updated : 20th August 2021 08:39 AM | அ+அ அ- |

பழனி அடிவாரப் பகுதியில் விபசாரத்தில் ஈடுபட்டதாக, விடுதி உரிமையாளா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனி அடிவாரப் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் விபசாரம், சூதாட்டம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடப்பதை தடுக்க, போலீஸாா் சாா்பில் அவ்வப்போது தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், விழிப்புணா்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், மலைக் கோயில் அடிவாரத்தில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக, அடிவாரம் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸாா் சோதனையிட்டதில், விபசாரம் நடப்பது உறுதியானது.
அதையடுத்து, விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மற்றும் விடுதி உரிமையாளரான அடிவாரத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (40) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், சடையப்பன் என்பவரை தேடி வருகின்றனா்.