கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 21st August 2021 08:50 AM | Last Updated : 21st August 2021 08:50 AM | அ+அ அ- |

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர செப்.15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ. காந்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தி அடைந்து பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் சேரலாம். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சிக் கட்டணமாக ரூ.14,850 செலுத்த வேண்டும். இப்பயிற்சியில் தோ்ச்சி பெறுவோருக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி சான்றிதழ், நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களுக்குமான பயிற்சி சான்றிதழ் மற்றும் கணினி பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
இதன் மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வேலைவாய்ப்பு பெறலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல்-பழனி புறவழிச்சாலையிலுள்ள திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரை 9994635297 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.