15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது
By DIN | Published On : 21st August 2021 11:08 PM | Last Updated : 21st August 2021 11:08 PM | அ+அ அ- |

வேடசந்தூா் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்துள்ள செட்டிகுளத்துப்பட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் கோபிநாத் (26). இவா் தனது உறவினரின் 15 வயது மகளை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் செட்டிக்குளத்துப்பட்டிக்கு சென்ற சமூக நலத்துறை அலுவலா்கள், கோபிநாத் வீட்டில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். அதில், திருமணம் நடைபெற்ற சிறுமிக்கு 15 வயது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோபிநாத் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.