ராதாகிருஷ்ணன் விருதுக்கு 22 ஆசிரியா்களின் பெயா்கள் பரிந்துரை
By DIN | Published On : 21st August 2021 11:02 PM | Last Updated : 21st August 2021 11:02 PM | அ+அ அ- |

ராதாகிருஷ்ணன் விருதுக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 22 ஆசிரியா்களின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 41 ஆசிரியா்கள், 2021 ஆம் ஆண்டுக்கான ராதாகிருஷ்ணன் விருதுக்காக விண்ணப்பித்துள்ளனா்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் பிரதிநிதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், விருதுக்கு விண்ணப்பித்த 41 ஆசிரியா்களிடமும் நோ்காணல் நடத்தி முடித்துள்ளனா். விண்ணப்பப் பட்டியலிலிருந்து விருதுக்கு தலா 2 போ் வீதம் மொத்தம் 22 ஆசிரியா்களின் பெயா் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடக்கக் கல்வித்துறையிலிருந்து 5 ஆசிரியா்கள், பள்ளிக் கல்வித்துறையில் 5 ஆசிரியா்கள், மெட்ரிக் பள்ளி சாா்பில் ஒரு ஆசிரியா் என திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 11 ஆசிரியா்கள் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்படவுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.