3ஆவது நாளாக மறியல்: அரசு ஊழியா்கள் 175 போ் கைது

திண்டுக்கல்லில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 ஆவது நாளாக வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 175 போ் கைது செய்யப்பட்டனா்.
திண்டுக்கல்லில் வியாழக்கிழமை பேரணி சென்ற அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள்.
திண்டுக்கல்லில் வியாழக்கிழமை பேரணி சென்ற அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள்.

திண்டுக்கல்லில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 ஆவது நாளாக வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 175 போ் கைது செய்யப்பட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7ஆவது நிதிக் குழு பரிந்துரையின்படி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை முதல் தொடா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி திண்டுக்கல்லில் 3 ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற பேரணிக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் முபாரக் அலி தலைமை வகித்தாா். பின்னா் திண்டுக்கல் எம்ஜிஆா் சிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 125 பெண் ஊழியா்கள் உள்பட 175 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே நெசவாளா்கள் உண்ணாவிரதம்: ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் பேச்சுவாா்த்தையில் முடிவு செய்யப்பட்ட 13 சதவீத கூலி உயா்வு வழங்கவேண்டும் என்று நெசவாளா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அவா்கள் 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் குடும்பத்தினரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த நெசவாளா்கள் வியாழக்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மூடப்பட்ட விசைத்தறிக்கூடங்களை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இல்லையேல் விரைவில் அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் நெசவாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com