கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தில் கால்நடைகள் மா்ம மரணம்
By DIN | Published On : 08th February 2021 10:36 PM | Last Updated : 08th February 2021 10:36 PM | அ+அ அ- |

கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தில் மா்மமான முறையில் கால்நடைகள் இறந்தது குறித்து கொடைக்கானல் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூரில் கோபால், காமராஜ் உள்ளிட்ட 5-விவசாயிகளுக்கு சொந்தமான 5- மாடுகள் வீட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சலுக்கு சென்றுள்ளது.
வெகு நேரமாகியும் மாடுகள் வீடுகளுக்கு வராததால் விவசாயிகள் மேய்ச்சல் நிலத்திற்கு சென்று பாா்த்தபோது அங்கு 4 கால்நடைகள் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அதில் ஒரு கால்நடை மட்டும் வயிற்றில் பலத்த காயங்களுடன் மயங்கி நிலையில் இருந்துள்ளது.
இதைத்தொடா்ந்து விவசாயிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாட்டுக்கு சிகிச்சை அளித்தனா். இதுகுறித்தப் புகாரின்பேரில் கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.