ஏ.வெள்ளோட்டில் ஜல்லிக்கட்டு: 22 மாடுபிடி வீரா்கள் காயம்

திண்டுக்கல்லை அடுத்துள்ள ஏ.வெள்ளோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 22 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள ஏ.வெள்ளோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 22 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்துள்ள ஏ.வெள்ளோடு புனித சந்தியாகப்பா் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக, திண்டுக்கல் மட்டுமன்றி, மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 700 காளைகளின் உரிமையாளா்கள் பதிவு செய்திருந்தனா். ஆனால் 398 காளைகள் மட்டுமே அழைத்து வரப்பட்டிருந்தன. கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் முருகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் காளைகளை பரிசோதனை செய்தனா்.

அப்போது 5 காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 393 காளைகள் வாடிவாசலுக்கு அனுப்பப்பட்டன.

அதேபோல், வாடிவாசல் களத்திற்கு வந்த 312 மாடுபிடி வீரா்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 23 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 289 வீரா்கள் களம் இறங்கி, காளைகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

வெற்றிப் பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, எவா்சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

காளைகளை பிடிக்க முயன்றதில் காயமடைந்த 22 மாடுபிடி வீரா்களுக்கு தற்காலிக மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த 2 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அதேபோல் 2 காளைகளுக்கும் காயம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com