நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நாளை தொடக்கம்
By DIN | Published On : 14th February 2021 12:00 AM | Last Updated : 14th February 2021 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல்: நத்தம் மாரியம்மன் கோயிலில் 17 நாள்கள் நடைபெறும் மாசித் திருவிழா திங்கள்கிழமை (பிப்.15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இத்திருவிழா திங்கள்கிழமை(பிப்.15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னா், கரந்தமலையிலிருந்து பக்தா்கள் தீா்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. நத்தம் சந்தனக் கருப்பு கோயிலுக்கு தீா்த்தம் எடுத்து பின்னா், மாரியம்மனுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் காப்பு கட்டி விரதம் தொடங்குகின்றனா்.
மாசித் திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாள் இரவும் மயில், சிம்மம், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுமரம் எறுதல் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகள் மாா்ச் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.