ஓய்வு பெற்ற ஆசிரியா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
By DIN | Published On : 14th February 2021 10:37 PM | Last Updated : 14th February 2021 10:37 PM | அ+அ அ- |

திண்டுக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஓய்வு பெற்ற ஆசிரியா் தற்கொலை செய்து கெண்டது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல்லிலிருந்து பழனி மாா்க்கமாக செல்லும் தண்டவாளத்தில், சின்னையாபுரம் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதை அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் முதியவா் ஒருவா் சடலமாகக் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் பழனி ரயில்வே போலீஸாா் அங்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
அதில் இறந்தவா் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரத்தை அடுத்துள்ள கும்மம்பட்டியைச் சோ்ந்த பழனிசாமி (75) என்பது தெரியவந்தது. அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.