பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து நூதன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 21st February 2021 09:13 PM | Last Updated : 21st February 2021 09:13 PM | அ+அ அ- |

கோபால்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூதன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
திண்டுக்கல்: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலையேற்றத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து கோபால்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நூதன ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள கோபால்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பெருமாள் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, சமையல் எரிவாயு உருளைக்கு பூமாலையிட்டு அஞ்சலி செலுத்தியும், பெட்ரோல் டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் மோட்டாா் சைக்கிளை கம்பு கட்டி தோளில் சுமந்தும் நூதன முறையில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்திற்கு காரணமான, மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...