தேசிய திறனாய்வுத் தோ்வு:திண்டுக்கல் மாவட்டத்தில் 3,017 போ் பங்கேற்பு
By DIN | Published On : 21st February 2021 09:14 PM | Last Updated : 21st February 2021 09:14 PM | அ+அ அ- |

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வில் 3,017 மாணவா்கள் பங்கேற்றனா்.
நிகழாண்டில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற இந்தத் தோ்வில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3,224 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். மாணவா்கள் தோ்வு எழுதுவதற்காக, திண்டுக்கல், பழனி, வேடசந்தூா், ஒட்டன்சத்திரம், நத்தம், கன்னிவாடி உள்ளிட்ட 16 இடங்களில் மொத்தம் 31 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தோ்வில் 3,017 மாணவா்கள் கலந்து கொண்டனா். 207 போ் தோ்வு எழுதவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...