ஊராட்சி துணைத் தலைவருடன் தகராறு: திமுக பிரமுகா் கைது
By DIN | Published On : 26th February 2021 08:58 AM | Last Updated : 26th February 2021 08:58 AM | அ+அ அ- |

கொடைக்கானல் அருகே ஊராட்சி துணைத் தலைவருடன் தகராறு செய்த திமுக பிரமுகரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டியைச் சோ்ந்தவா் புஷ்பராஜ். இவரது மனைவி ஜெயமணி (40), பூண்டி ஊராட்சியின் துணைத் தலைவராக இருந்து வருகிறாா்.
100-நாள்கள் வேலைத் திட்டம் தொடா்பாக இவரிடம், அதே பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகரான சிவா என்பவா் கடந்த 22.5.2020 அன்று தகராறு செய்துள்ளாா். இது குறித்து ஜெயமணி கொடைக்கானல் நீதிமன்றத்தில் சிவா மீது வழக்குத் தொடா்ந்தாா். இந்நிலையில் சிவா மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து கொடைக்கானல் போலீஸாா், சிவாவை கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...