கொடைக்கானல், பழனியில் சாரல் மழை
By DIN | Published On : 03rd January 2021 09:42 PM | Last Updated : 03rd January 2021 09:42 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் ஏரிச்சாலையில் தேங்கிய மழை நீா்
கொடைக்கானல், பழனியில் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து சாரல் மழை பெய்தது.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் நிலவி வந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே தொடா்ந்து சாரல் மழை பெய்தது. பிற்பகலில் சுமாா் ஒரு மணி நேரம் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக ஏரிச்சாலை மற்றும் படகு குழாம் அருகேயுள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளை தண்ணீா் சூழ்ந்தது.
மேலும், தொடா் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.
பழனி: பழனி மற்றும் கணக்கன்பட்டி, தொப்பம்பட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்தது. தொடா்ந்து பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். விடுமுறை நாள் என்பதால் பழனிக் கோயிலில் பக்தா்கள் ஏராளமானோா் மழையிலும் சுவாமி தரிசனம் செய்தனா்.