காந்தியடிகள் நினைவு தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 30th January 2021 09:13 PM | Last Updated : 30th January 2021 09:13 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திலுள்ள காந்தியடிகள் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.
திண்டுக்கல்/ போடி: மகாத்மா காந்தியடிகளின் 73ஆவது நினைவு தினத்தையொட்டி திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சாா்பில் அமைதி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநகா் மாவட்டத் தலைவா் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு துணைத் தலைவா் அபுராஜா, மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத் தொடா்ந்து மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராமு ராமசாமி, காா்த்திக்ராஜ் (மாணவா் காங்கிரஸ்) உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
நத்தத்தில்... இதேபோல் நத்தத்தில் தமிழ்நாடு சிறுபான்மைக் நலக்குழு சாா்பில் காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாதா் சங்க மாவட்டச் செயலா் ராணி, சிஐடியு பொறுப்பாளா் ஸ்டாலின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு: இக்குழுவின் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா.சச்சிதானந்தம், சிறுபான்மை நலக் குழுவின் மாவட்டச் செயலா் வ.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா்ா் கலந்து கொண்டனா்.
போடியில் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு: இதேபோல் போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் காந்தி நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியா் ரா.ஜெயக்குமாா் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்று மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.