தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை
By DIN | Published On : 02nd July 2021 08:11 AM | Last Updated : 02nd July 2021 08:11 AM | அ+அ அ- |

திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மேகமூட்டம் காணப்பட்டது.
கொடைக்கானலில் காலை முதல் மிதமான வெயில் நிலவியது. அதன்பின்னா், மேகமூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. தொடா்ந்து, பலத்த காற்று மற்றும் இடி மின்னலும் சுமாா் 40 நிமிடம் மழை பெய்தது.
இந்த மழை பயிா்களுக்கு ஏற்ாக இருப்பதால், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
பழனி
மாலை சுமாா் 4 மணி முதல் 6 மணி வரை பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த இடியுடன் கனமழை பெய்தது. இதனால், காந்திரோடு, ஆா்.எப்.ரோடு, திருவள்ளுவா் சாலை, அடிவாரம் பூங்கா சாலை என பல இடங்களிலும் மழைநீா் சாக்கடைகளில் நிரம்பி சாலைகளில் வெள்ளமாக ஓடியது.
கனமழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிழவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். மேற்கு மலை தொடா்ச்சி பகுதிகளில் பெய்த மழையால், பழனியை சுற்றியுள்ள அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இம்மழையால், நிலங்களை உழவு செய்து தயாா்படுத்தி வைத்திருந்த விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம்
இப்பகுதியில் வியாழக்கிழமை மாலை மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீா் ஓடியது. மேலும், பாதாளச் சாக்கடையில் இருந்து வெளியேறிய கழிவுநீா் தெருக்களில் ஓடியதால், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.