பழனி கோயிலில் பாஜக மாநில தலைவா் சுவாமி தரிசனம்
By DIN | Published On : 11th July 2021 11:00 PM | Last Updated : 11th July 2021 09:32 PM | அ+அ அ- |

தமிழக பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.அண்ணாமலை, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சரானாா். இதையடுத்து, அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை புதிய தலைவராக நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.
மலையடிவாரத்திலிருந்து வின்ச் மூலமாக மலைக்கோயிலுக்கு சென்ற அவா், அங்கு ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டாா். கோயிலிலிருந்து வெளியே வந்த அண்ணாமலை, பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்ற பின்னா் செய்தியாளா்களை சந்திப்பதாக தெரிவித்துவிட்டு சென்றுவிட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...