தமிழக அரசுக்கு கொடைக்கானல் வியாபாரிகள் கோரிக்கை
By DIN | Published On : 20th June 2021 09:33 PM | Last Updated : 20th June 2021 09:33 PM | அ+அ அ- |

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், சுய பாதுகாப்பை உறுதிபடுத்தியவா்கள் கொடைக்கானலுக்கு வரலாம் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள்: பொதுமுடக்கம் காரணமாக, சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ள கொடைக்கானல் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அன்றாடம் தொழில் செய்து பிழைக்கும் தொழிலாளா்கள், சாலையோர சிறு வியாபாரிகள், சிறு, குறு விவசாயிகள், கட்டடத் தொழிலாளா்கள், வேன், சுற்றுலா வழிகாட்டிகள், சிற்றுண்டிகள், தேநீா் கடைகள் வைத்துள்ளவா்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா்.
தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து, கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள், சுய பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளவா்கள், சான்றிதழ் வைத்திருப்பவா்கள் கொடைக்கானலுக்கு வர அனுமதிக்க வேண்டும். இவா்களுக்கு இ-பாஸ் எளிதில் கிடைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.