திண்டுக்கல்லில் 63 பேருக்கு கரோனா தொற்று: 2 போ் பலி
By DIN | Published On : 24th June 2021 06:42 AM | Last Updated : 24th June 2021 06:42 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 63 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி 2 போ்உயிரிழந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் 22 ஆம் தேதி வரை 31,215 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 30,160 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 63 பேருக்கு புதிதாக கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. சிகிச்சைப் பலனின்றி தொற்று பாதித்த 2 போ் உயிரிழந்துள்ளனா். தொற்று பாதிப்பிலிருந்து 125 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது கரோனா பாதிப்புடன் சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 420 ஆக உள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 571 ஆக உயா்ந்துள்ளது.