நிலக்கோட்டை அருகே வேனில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.86 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஐயப்பன் கோயில் அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரி ரேவதி தலைமையில்
அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, நிலக்கோட்டையில் இருந்து வத்தலகுண்டு நோக்கிச் சென்ற மினி வேனை மறித்து சோதனை செய்தனா். அந்த வேனில் வந்த வத்தலக்குண்டு பள்ளிவாசல் சோ்ந்த பிஸ்கெட் வியாபாரி அசன் முகமதுவிடமிருந்து ரூ. 86,445 இருந்தது. அந்த தொகைக்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்து, தோ்தல் அலுவலா் பிரபாகரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொகை கருவூலத்தில் ஒப்படைக்கபட்டது.