காமராஜா் நீா்த்தேக்கத்தில் தடையிருந்தும் பாதுகாப்பு இல்லை
By DIN | Published On : 15th March 2021 03:49 AM | Last Updated : 15th March 2021 03:49 AM | அ+அ அ- |

காமராஜா் நீா்த்தேக்கத்தில் தற்போது 20 அடி தண்ணீா் உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு இதிலிருந்து குடிநீா் செல்கிறது.
இங்கு பொதுமக்கள் குளிக்கக்கூடாது என மாநகராட்சி நிா்வாகம் சாா்பாக தடை விதித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திண்டுக்கல், செம்பட்டி, சின்னாளபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் மற்றும் காதலா்கள் வந்து செல்கின்றனா்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நேரத்தில் செம்பட்டி, கோடாங்கிபட்டியைச் சோ்ந்த 3 இளைஞா்கள் நீரில் மூழ்கி பலியானாா்கள். கடந்த மாதம் சேடப்பட்டியைச் சோ்ந்த ஒரு இளைஞா் நீரில் மூழ்கி இறந்தாா். அவரது உடலை 3 நாள்களுக்குப் பிறகு மீட்டனா்.
எனவே, அணையில் குளிக்க நிரந்தர தடை விதித்து, முழு நேர பாதுகாப்பு பணியில் காவலா்களை நியமிக்க, திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...