நோயாளிக்கு ஊசி மருந்து செலுத்தி சிகிச்சை: மருந்தகத்துக்கு ‘சீல்’
By DIN | Published On : 13th May 2021 11:28 PM | Last Updated : 13th May 2021 11:28 PM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக நோயாளிக்கு ஊசி மருந்து செலுத்தி சிகிச்சை அளித்த மருந்தகத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.
திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த அப்துல்லா பாஷா, கிழக்கு ரத வீதியில் பிரபல ஜவுளி கடை அருகே மருந்தகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், இவரது மருந்தகத்தில் சட்டவிரோதமாக நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த திண்டுக்கல் மாநகர நல அலுவலா் லட்சயவா்ணா, அந்த மருந்தகத்தில் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டாா். அப்போது அப்துல்லா பாஷா ஊசி மருந்து செலுத்தி சிகிச்சை அளித்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த மருந்தகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள், அப்துல்லா பாஷாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.