கொடைக்கானலில் காட்டெருமைகள் உலா
By DIN | Published On : 16th May 2021 10:24 PM | Last Updated : 16th May 2021 10:24 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில் காட்டெருமைகள் உலா வந்தன.
கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தை முன்னிட்டு கொடைக்கானலில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காவல் துறையினரின் கட்டுப்பாட்டால் பொது மக்கள்
வெளியே செல்லவில்லை. இந் நிலையில், அமைதியான சூழ்நிலையில், கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் காட்டெருமைகள் சுதந்திரமாக உலா வந்தன.
வனப் பகுதிகளில் புல்வெளிகள் இல்லாததாலும் அவற்றிற்கு தேவையான உணவு இல்லாததாலும் அவைகள் உணவைத் தேடி நகா்ப் பகுதிகளுக்குள் வருகின்றன. எனவே வனப் பகுதிகளில் வன விலங்குகளுக்குத் தேவையான புல்வெளிகள், சிறிய தடுப்பு தண்ணீா் தொட்டிகள் அமைப்பதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.