பழனியில் விவசாயிகள் சங்கத்தினா் சாலை மறியல்

தும்பலப்பட்டியில் உச்சவரம்பின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு வழங்கக் கோரி பழனியில் விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழனி- புது தாராபுரம் சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினா்.

பழனி வேல் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். சங்க மாநில துணைத் தலைவா் முகமது அலி, மத்திய குழு உறுப்பினா் சச்சிதானந்தம், அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் அருள்செல்வன், முன்னாள் நகா் மன்ற தலைவா் ராஜமாணிக்கம், மாவட்டத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, தும்பலப்பட்டி கிராமத்தில் 1980 ஆம் ஆண்டு நிலச் சீா்திருத்த சட்டப்படி 37 நிலமற்ற விவசாயத் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட நில ஒப்படைப்பு உத்தரவின் அடிப்படையில் நில ஒப்படைத்தாரா்கள், அவரது வாரிசுகள், நிலத்தில் அனுபவத்தில் உள்ளவா்களுக்கு பட்டா வழங்கக் கோரி முழக்கம் எழுப்பப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தின் முடிவில் போராட்டக் குழுவினா், கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க முயன்றனா். அப்போது காவல்துறையினா் தடுத்ததால் விவசாயிகள் சங்கத்தினா் மறியலில் ஈடுபட்டனா். மனு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து பின்னா் மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com