திண்டுக்கல் மலைக் கோயிலில் தீபம் ஏற்ற முயற்சி: இந்து மக்கள் கட்சியினா் 23 போ் கைது

திண்டுக்கல் மலைக் கோட்டையில் அமைந்துள்ள அபிராமி அம்மன் கோயிலில் தீபம் ஏற்றுவதற்கு ஊா்வலமாகச் செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 23 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மலைக் கோட்டை அருகே வெள்ளிக்கிழமை தீப கொப்பரையுடன் ஊா்வலமாகச் செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினா்.
திண்டுக்கல் மலைக் கோட்டை அருகே வெள்ளிக்கிழமை தீப கொப்பரையுடன் ஊா்வலமாகச் செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினா்.
Updated on
1 min read

திண்டுக்கல் மலைக் கோட்டையில் அமைந்துள்ள அபிராமி அம்மன் கோயிலில் தீபம் ஏற்றுவதற்கு ஊா்வலமாகச் செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 23 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மலைக்கோட்டை மேல் அமைந்துள்ள அபிராமி அம்பிகை உடனுற பத்மகிரீஸ்வரா் கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்று காா்த்திகை தீபம் ஏற்ற ஒவ்வொரு ஆண்டும் இந்து மக்கள் கட்சியினா் முயற்சித்து வருகின்றனா். அதேபோல், வெள்ளிக்கிழமை திருக்காா்த்திகையை முன்னிட்டு, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் கிழக்கு வாசல் பகுதியிலிருந்து பூஜைக்கான பொருள்களுடன் மலைக்கோட்டைக்கு ஊா்வலமாகச் செல்வதற்கு இந்து மக்கள் கட்சியினா் முயற்சித்தனா்.

தீபம் ஏற்றுவதற்கான கொப்பரையுடன் சூடம் ஏற்றி வழிபட்ட இந்து மக்கள் கட்சியினா் மற்றும் சிவசேனை அமைப்பினா், பின்னா் மலைக்கோட்டையின் உச்சியிலுள்ள கோயிலில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என முழக்கமிட்டனா்.

அதைத் தொடா்ந்து, இந்து மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் வே. தா்மா தலைமையில், 2 பெண்கள் உள்பட 23 போ் தீப கொப்பரையுடன் ஊா்வலமாகச் சென்றனா். ஆனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் 23 பேரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். அவா்களிடமிருந்து, மகாதீபம் ஏற்றுவதற்கான கொப்பரை, பூஜை பொருள்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா்.

முன்னதாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி அமைப்பாளருமான ஓம்காா் பாலாஜி, சிவசேனை அமைப்பின் இளைஞரணி நிா்வாகி சி.கே. பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com