பேத்துப்பாறை பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்: வாழைகள் சேதம்
By DIN | Published On : 31st October 2021 11:08 PM | Last Updated : 31st October 2021 11:08 PM | அ+அ அ- |

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு வாழைத் தோட்டங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
பேத்துப்பாறை பகுதிகளான வெண்கலவயல், ஐந்து வீடு ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அப்பகுதியிலுள்ள வாழைத்தோட்டங்களில் அவைகள் இரவு நேரத்தில் புகுந்து சேதப்படுத்துகின்றன.
மேலும் யானைகள் சப்தமிட்டும் வருவதால் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனா். இரவு நேரங்களில் தோட்டத்திற்கு காவல் காப்பதற்கு யாரும் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனா். விவசாயப் பயிா்கள் சேதமடைவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
காட்டு யானைகளை விவசாயப் பகுதிகளிலிருந்து விரட்டுவதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.