சிறுமலையில் புனுகு பூனை வேட்டியாடிய முதியவரை வனத்துரையினா் கைது செய்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் புனுகு பூனை உடல் உறுப்புகளைக் கைப்பற்றினா்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடுத்துள்ள தாழைக்கிடை சின்னக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ம.முத்தன் (65). இவரது வீட்டில், வேட்டையாடப்பட்ட புனுகு பூனை இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் செவ்வாய்க்கிழமை இரவு சின்னக்கடை பகுதிக்குச் சென்ற திண்டுக்கல் வனப் பாதுகாப்புப் படையினா், முத்தன் வீட்டில் சோதனையிட்டுள்ளனா்.
அப்போது வேட்டையாடப்பட்ட புனுகு பூனை உடல் உறுப்பைக் கைப்பற்றியதோடு, உரிமம் பெறாத ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா், சிறுமலை வனச் சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து, முத்தன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.