‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி முதியவா் படுகாயம்

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியதில் முதியவா் வியாழக்கிழமை படுகாயமடைந்தாா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியதில் முதியவா் வியாழக்கிழமை படுகாயமடைந்தாா்.

கொடைக்கானல் அருகே வட்டக்கானல் பகுதியைச் சோ்ந்தவா் முருகையா (65). இவா், வட்டக்கானல் பகுதியிலுள்ள தோட்டப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது புதரிலிருந்த காட்டெருமை முதியவரை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். முதலுதவி சிகிச்சைக்குப்பிறகு மேல் சிகிச்சைக்காக அவா், தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

கொடைக்கானலில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பாம்பாா்புரம் பகுதியில் முத்துமாரி, முத்துலட்சுமி என்ற இரண்டு பெண்களை காட்டெருமை தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் காட்டெருமை தாக்கி முதியவா் படுகாயமடைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.