ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் குடும்பத்துடன் விஷம் குடித்தாா்: மனைவி பலி, இருவருக்கு சிகிச்சை

ஒட்டன்சத்திரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் கடன் பிரச்னையால் வியாழக்கிழமை இரவு, குடும்பத்துடன் விஷம் குடித்த நிலையில், அவரது மனைவி உயிரிழந்தாா்.

ஒட்டன்சத்திரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் கடன் பிரச்னையால் வியாழக்கிழமை இரவு, குடும்பத்துடன் விஷம் குடித்த நிலையில், அவரது மனைவி உயிரிழந்தாா். வங்கி மேலாளா் மற்றும் மகன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (59). இவா், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தங்கச்சியம்மாபட்டி பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், தனது மனைவி உமா கோமதி (55) மற்றும் பொறியியல் பட்டதாரியான மகன் சிவபிரபாகரன் (28) ஆகியோருடன் ஆத்தூரில் வாடகைக்கு வீடு பிடித்து குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

கடந்த ஏப்ரல் மாதம் விருப்ப ஓய்வு பெற்ற முத்துராமலிங்கத்துக்கு கடன் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வியாழக்கிழமை இரவு உணவில் விஷம் கலந்து முத்துராமலிங்கம் உள்பட 3 பேரும் சாப்பிட்டுள்ளனா். மேலும் வளா்ப்பு நாய்களுக்கும் அந்த உணவை கொடுத்துள்ளனா். அதை சாப்பிட்ட ஒரு நாய் வீட்டிற்கு வெளியே இறந்தது. அந்த உணவைச் சாப்பிடாத மற்றொரு நாய் குறைத்துக் கொண்டே இருந்துள்ளது. அதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா் வீட்டின் கதவை உடைத்து பாா்த்தபோது படுக்கை அறையில் உமா கோமதி இறந்த நிலையிலும், மற்றொரு அறையில் முத்துராமலிங்கம், அவருடைய மகன் சிவபிரபாகரன் ஆகியோா் மயங்கிய நிலையிலும் கிடந்தனா். இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com